உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் காலி மதுபாட்டில்கள்

ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் காலி மதுபாட்டில்கள்

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் மேம்பாலத்தின்கீழ், சட்டவிரோதமாக இரவு நேரங்களில் மது அருந்துவோர்கள் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வண்டலுார் - -வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதுார்- - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலைகளுக்கு இடையே உள்ள ஒரகடம் சந்திப்பில் மேம்பாலம் உள்ளது.பிரதான தொழிற்சாலை பகுதியான ஒரகடம் சந்திப்பில் உள்ள மேம்பாலம் வழியே வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையும், மேம்பாலத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதுார் - - சிங்கபெருமாள் கோவில் சாலையும் செல்கிறது.இப்பகுதியைச் சுற்றி, 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. பல லட்சம் ஊழியர்கள் பணி செய்கின்றனர். இதனால், நாள்தோறும் ஒரகடம் பகுதிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில், மேம்பாலத்தின் கீழ் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் மேம்பாலத்தின் கீழ் மர்ம நபர்கள் மது அருந்தி செல்கின்றனர்.மேம்பாலத்தின் அருகில் செயல்படும், 'டாஸ்மாக்' கடையில் இருந்து மது வாங்கிவரும் சமூக விரோதிகள், மேம்பாலத்தின் கீழ் அமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பின்னர், காலி பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர்.எனவே, இரவு நேரங்களில் போலீசார் ரோந்து சென்று, மேம்பாலத்தின் கீழ் அமர்ந்து சட்ட விரோதமாக மது அருந்தும் சமூக விரோதிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ