உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கண் மருத்துவ முகாம் 315 பேருக்கு பரிசோதனை

கண் மருத்துவ முகாம் 315 பேருக்கு பரிசோதனை

காஞ்சிபுரம் : வாலாஜாபாத் அரிமா சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, வாலாஜாபாத் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கண் மருத்துவ முகாம் நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு, வாலாஜாபாத் அரிமா சங்க தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்து, கண் பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார்.இந்த முகாமில், 315 பேர்களுக்கு பார்வை கோளாறு உள்ளிட்ட பல்வேறு விதமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், 56 பேர்களுக்கு கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை அரவிந்த் கண் மருத்துவக் குழுவினர் மற்றும் வாலாஜாபாத் அரிமா சங்க செயலர் தனராஜன், ஸ்ரீராமன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ