உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இளைஞர் மேம்பாடு நிறுவனத்தில் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை

இளைஞர் மேம்பாடு நிறுவனத்தில் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாடு மையம் இயங்கி வருகிறது.நேற்று முன்தினம், மதிய உணவு சாப்பிட்டு வகுப்பறைக்கு வந்த 45க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.இதையடுத்து, கல்லுாரியில் நேற்று மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, மாணவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார் கல்லுாரி முழுதும் ஆய்வு மேற்கொண்டார்.சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பாதிப்படைந்த 40 மாணவர்கள் பூரண குணமடைந்து கல்லுாரி திரும்பினர். கல்லுாரி மாணவர்கள் குடிக்கும் குடிநீரில் பிளீச்சிங் பவுடர் கலந்து, வினியோகம் செய்யப்படுகிறது.மூன்று குடிநீர் மாதிரி மற்றும் மல மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ