உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி

காஞ்சிபுரம், : வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 46; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், வயல்வெளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவர் மீது மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார், இளங்கோவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை