| ADDED : ஜூன் 24, 2024 05:37 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, வில்லிவலம் கிராமத்தில், 11 கே.வி., மின்மாற்றி செல்கிறது. இந்த மின்மாற்றியில் இருந்து, மின்வழித் தடத்தை தாங்கி பிடிக்கும் பத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன.இதில், சில மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதை கண்காணித்து மின் கம்பங்களை மாற்ற வேண்டி மின்வாரியதுறையினர் ஆர்வம் காட்டுவதில்லை.குறிப்பாக, விவசாயிகள் அளிக்கும் புகார்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை என, விவசாயிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.இதனால், பலமாக காற்று அடித்தால், சேத மின்கம்பம் உடைந்து விழும் அபாயம் உள்ளது.எனவே, சேதம் ஏற்பட்டிருக்கும் மின்கம்பத்தை மாற்றி மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.