உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பொற்பந்தலில் பழுதான ஏரி மதகு சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

பொற்பந்தலில் பழுதான ஏரி மதகு சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் கிராமத்தில் ஒன்றிய கட்டுப்பாட்டின் கீழ், 110 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் பாசனத்தின் வாயிலாக, அப்பகுதியில்300 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பயிரிடப்படுகின்றன. இந்த ஏரியின் 2வது மதகு, சில ஆண்டுகளுக்கு முன் பழுதாகி ஏரியில் சேகரமாகும் தண்ணீர் வீணாக வெளியேறியது.இதையடுத்து, 2020ம் ஆண்டு, 6 லட்சம் ரூபாய் செலவில் சேதமடைந்த ஏரி மதகு சீரமைக்கப்பட்டது. சீரமைப்பு பணிக்கு பின், தற்போது வரை ஏரியின் மதகு திறக்கப்படாமலேயே மதகு வழியாக தண்ணீர் வெளியேறும் அவலம் உள்ளது.இதனால், அப்பகுதி விவசாயிகள் பருவமழை காலத்தில் ஏரி மதகு அருகே தடுப்பு கரைகள் அமைத்து தண்ணீர் வெளியேறாமல் பாதுகாத்து வருகின்றனர். எனவே, பழுதான பொற்பந்தல் ஏரி மதகை தரமான முறையில் சீரமைத்துத் தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ