மேலும் செய்திகள்
மயான கொள்ளை உற்சவங்கள்
27-Feb-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தில், ஆண்டுதோறும் மாசி அமாவாசை மறுநாளில், மயான கொள்ளை உற்சவம் நடக்கும்.நடப்பாண்டு உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை 9:00 மணி அளவில் கம்மவார்பாளையம் கிராமத்தில் இருந்து, கபாள சட்டி புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டியபக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்செலுத்தினர். இரவு, மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். கோவிந்தவாடி அகரம் காலனி கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர் அம்மனை தரிசித்து சென்றனர்.
27-Feb-2025