உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறுவாக்கத்தில் வேர்க்கடலை விதைக்கும் பணி துவக்கம்

சிறுவாக்கத்தில் வேர்க்கடலை விதைக்கும் பணி துவக்கம்

சிறுவாக்கம்:வாலாஜாபாத் ஒன்றியத்தில் பரந்துார், கொட்டவாக்கம், புள்ளலுார், கம்மவார்பாளையம், சிறுவாக்கம், படுநெல்லி, கோவிந்தவாடி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.வாலாஜாபாத் சுற்றுவட்டாரத்தில் கோடைக்கு பின், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த ஈரப்பதத்திற்கு ஏற்ப, விவசாயிகள் தங்களின் விளை நிலங்களை உழுது பண்படுத்தி வருகின்றனர்.இந்த நிலங்களில் வேர்க்கடலை, உளுந்து, எள் ஆகிய விதைகளை விதைக்க, உழவு மாடுகள் மற்றும் டிராக்டர்களை பயன்படுத்தி விதை விதைக்கும் பணியை துவக்கி உள்ளனர். குறிப்பாக, சிறுவாக்கம் கிராமத்தில், உழவு மாடுகளின் மூலமாக, வேர்க்கடலை விதைக்கும் பணியில் கூலித்தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆடி மாதம் நெல் விதைக்க உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை