உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பார்க்கிங் ஆக மாறிய நெடுஞ்சாலை செரப்பனஞ்சேரியில் விபத்து அபாயம்

பார்க்கிங் ஆக மாறிய நெடுஞ்சாலை செரப்பனஞ்சேரியில் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்பும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, காஞ்சிபுரம் -- பாலுார் உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில், வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து, கார், இருசக்கர வாகனங்களில், இச்சாலை வழியாக தினமும் சென்று வருகின்றனர்.இந்த சாலையில் செரப்பனஞ்சேரி, ஒரகடம், கண்டிகை, பண்ருட்டி, வாரணவாசி முதல் வாலாஜாபாத் வரை பல இடங்களில், ஏராளமான உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் செயல்படுகின்றன.இந்த கடைகளுக்கு வரும் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை சாலையோரங்களில் அபாயகரமாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், அதிவேகமாக வரும் மற்ற வாகனங்கள், இந்த வாகனங்களின் மீது மோதி விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது.குறிப்பாக, மாலை நேரங்களில் கடைகளுக்கு ஏதிரே சாலையோரத்தில் வரிசைக்கட்டி நிறுத்தும் வாகனங்களால், நெரிசல் ஏற்படுவதுடன், அவ்வப்போது விபத்துகளும் நடந்து வருகின்றன.எனவே, நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி