உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இளையனார் வேலுாரில் 5ம் தேதி வரை லட்சார்ச்சனை

இளையனார் வேலுாரில் 5ம் தேதி வரை லட்சார்ச்சனை

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஒன்றியம், இளையனார்வேலுாரில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், லட்சார்ச்சனை பெருவிழா ஆறு நாட்கள் விமரிசையாக நடைபெறும்.அதன்படி நடப்பு ஆண்டுக்கான லட்சார்ச்சனை பெருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.லட்சார்ச்சனை நடைபெறும் ஆறு நாட்களும், சண்முக பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மஹா தீபாராதனை நடைபெறும்.லட்சார்ச்சனை துவக்க நாளான நேற்றுமுன்தினம், திரளான பக்தர்கள் லட்சார்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர். வரும் 5ம் தேதி லட்சார்ச்சனை பெருவிழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் கதிரவன், அறங்காவலர் குழுவினர் இணைந்து செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !