உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒரகடத்தில் வங்கி எதிரே கழிவுநீர் வழிந்தோடி சீர்கேடு

ஒரகடத்தில் வங்கி எதிரே கழிவுநீர் வழிந்தோடி சீர்கேடு

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் ஐ.ஓ.பி., வங்கி எதிரே உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வங்கியின் வாசலில் வழிந்தோடுவதால், வாடிக்கையாளர்கள் தொற்றுநோய் பரவும் அச்சத்தில் உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஒரகடம் மேம்பாலம் அருகே, ஐ.ஓ.பி., வங்கி செயல்பட்டு வருகிறது. சென்னக்குப்பம், மாத்துார், எறையூர், வட்டம்பாக்கம், வைப்பூர், பனையூர், எழிச்சூர், வடக்குப்பட்டு, பண்ருட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில், வங்கியின் வெளியில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர், வங்கியின் வாசலில் வழிந்தோடுகிறது.இதனால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும், கழிவுநீரை மிதித்தபடி செல்லும் வாடிக்கையாளர்கள் நோய்த்தொற்று பரவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கழிவுநீர் தொட்டியில் இருந்து நிரம்பி வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை