காஞ்சியில் அஞ்சல் சேமிப்பு கணக்கு காப்பீடு எண்ணிக்கை அதிகரிப்பு
காஞ்சிபுரம்:கடந்த நிதியாண்டை காட்டிலும், நடப்பு நிதியாண்டில் அஞ்சல் துறையில் பல வித சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும், ஆயுள் காப்பீடு மற்றும் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட பாலிசிகள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தலைமை தபால் நிலையங்கள், 55 துணை அஞ்சலகங்கள், 272 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், தொடர் வைப்பு கணக்கு, முதியோர் சேமிப்பு திட்டம், கால வைப்பு கணக்கு, ஆயுள் காப்பீடு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், கிஸான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு, 4 சதவீத வட்டியில் இருந்து, வாடிக்கையாளர் எடுக்கும் திட்டங்களுக்கு ஏற்றவாறு, 8.5 சதவீதம் வட்டி வரை, அஞ்சல் துறை வழங்கி, சேமிப்பு கணக்குகள் துவக்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், 2022- - 23ம் ஆண்டு, 44,378 அஞ்சல் கணக்குள் துவக்கப்பட்டு உள்ளன. நடப்பாண்டு, 2023- - 24ம் நிதியாண்டில், 1.18 லட்சம் கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன. இதில், 74,497 கணக்குகள் அதிகரித்துள்ளது.மேலும், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில், கடந்தாண்டு, 4,119 பாலிசிகள் துவக்கப்பட்டு உள்ளன.நடப்பாண்டு, 5,023 பாலிசிகள் துவக்கப்பட்டுள்ளன. இது, கடந்தாண்டை காட்டிலும், 904 பாலிசிகள் கூடுதல். இதனால், அஞ்சல் துறை ஊழியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் கூறியதாவது: காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டம், பலவித அஞ்சல் கணக்குகள் துவக்குவதில், முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, அஞ்சல் துறை சேமிப்பு கணக்கு துவக்குவதில், மண்டலத்தில் இரண்டாவது இடமும், அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில், மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில், அஞ்சல் துறை ஊழியர்களின் ஒத்துழைப்பால், புதிய பாலிசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
நடப்பாண்டு சேமிப்பு கணக்குகள்!
திட்டங்கள் 2022 - -23 2023- - 24செல்வமகள் சேமிப்பு திட்டம் 9,252 6,935தேசிய சேமிப்பு பத்திரம் 2,926 2,844தொடர்வைப்பு தொகை - 45,081பொது மக்கள் வைப்பு நிதி 4,425 4,618சேமிப்பு கணக்கு 12,943 16,192 மாதாந்திர வருவாய் திட்டம் 1,747 1,871 மூத்த குடிமக்களின் சேமிப்பு கணக்கு 1,207 1,961கிஸான் விகாஸ் பத்திரம் 1,189 1,248கால வைப்பு நிதி 10,698 30,635மகளிர் சேமிப்பு கணக்கு - 7,449மொத்தம் 44,387 11,8834
காப்பீடு திட்டங்கள்
திட்டங்கள் 2022 - -23 2023 - -24 கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு 2,648 3,137அஞ்சல் ஆயுள் காப்பீடு 1,471 1,886 மொத்தம் 4,119 5,023