| ADDED : ஜூலை 02, 2024 11:39 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தபேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் நல அரசு துவக்கப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ- -- மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியை சுற்றிலும் முழுமையாக சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. முகப்பு பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி கடந்த ஆண்டு இடிந்துவிட்டது.பள்ளிக்கு முழுமையாக சுற்றுச்சுவர் அமைக்காததால், பள்ளி வளாகம் மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. மாடுகள் மேய்வதால், பள்ளி மாணவ- - மாணவியர், ஆசிரியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.மேலும், விடுமுறை நாட்களில் பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகிறது. எனவே, மாணவ- - மாணவியரின் பாதுகாப்பு கருதி, நத்தப்பேட்டை ஆதிதிராவிடர் நல அரசு துவக்கப்பள்ளிக்கு முகப்பு பக்கத்தில் சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.மேலும், விடுபட்ட இடங்களில் சுற்றுச்சுவர் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பள்ளியில் பயிலும், மாணவ- - மாணவியரின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.