உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊத்துக்காடு  கூட்டுச் சாலையில் குடிநீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

ஊத்துக்காடு  கூட்டுச் சாலையில் குடிநீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

வாலாஜாபாத் : வாலாஜாபாத்தில் இருந்து, ஒரகடம், படப்பை வழியாக தாம்பரத்தை இணைக்கும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் வாலாஜாபாத் அடுத்து, ஊத்துக்காடு கூட்டுச்சாலை உள்ளது.ஊத்துக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பேருந்து வாயிலாக கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஊத்துக்காடு கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வாயிலாக கோவிலுக்கு சென்றடைகின்றனர்.ஊத்துக்காடு கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் மற்றும் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.எனவே, இப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் பொது குடிநீர் குழாய் ஏற்படுத்த, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை