| ADDED : ஏப் 01, 2024 02:11 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னிதி தெருவில் உள்ள வீடு மற்றும் கடைகளுக்கு மின்கம்பம் வாயிலாக மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது.தற்போது, பூமிக்கடியில் புதைவட கேபிள் வழித்தடம் அமைக்க, சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு, கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதியில் சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டதால், சாலையின் அகலம் குறைந்துவிட்டது.இதனால், இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, நிலத்தடியில் புதைவட கேபிள் அமைக்கும் பணியை விரைந்து முடித்து சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து காஞ்சிபுரம்மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:காமாட்சியம்மன் சன்னிதி தெருவில், முதற்கட்டமாக பிரதான கேபிள் பதிக்கும் பணி நிறைவு பெற்றது. அடுத்து, வீடுகளுக்கு சர்வீஸ் ஒயர் மின் இணைப்பு வழங்கும் பணி நடைபெற உள்ளது. இப்பணி மூன்று நாட்களில் நிறைவு பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.