உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சர்வதேச கிக் பாக்சிங்: காஞ்சி வீரர்கள் தகுதி

சர்வதேச கிக் பாக்சிங்: காஞ்சி வீரர்கள் தகுதி

காஞ்சிபுரம் : தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி, மஹாராஷ்ரா மாநிலம் புனேவில், கடந்த 21 முதல் 26ம் தேதி வரை நடந்தது.இதில், 7 - 15 வயது பிரிவில், சிறுவர்கள் மற்றும் கேடட் ஆகிய இரு பிரிவுகளில் பாயின்ட் பைட்டிங், லைட் கான்டாக்ட், கிக் லைட் உள்ளிட்ட பல பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டியில், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில், 102 சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஒன்மேன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த 12 சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர்.இதில், பேவின், சத்தியநாராயனன், ஹர்ஷன், சரனிகா, நிஹாத்திரி, ரித்தீஷ் அஜெய் ஆகியோர் தங்க பதக்கமும், மித்ரன், தர்ஷிக், தாருனிகா ஆகியோர் வெள்ளி பதக்கமும், வேல்விழி வெண்கல பதக்கமும் வென்று, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தனர்.முதல் முறையாக, பலம் வாய்ந்த மஹாராடிஷ்ராவை பின்னுக்கு தள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தமிழக அணி கைப்பற்றியது. இதில், தங்க பதக்கம் வென்ற வீரர்கள், ஐரோப்பிய நாடான ஹங்கேரியில், ஆகஸ்ட் மாதம் நடக்கும் சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என, காஞ்சிபுரம் பயிற்சியாளர் கணேஷ் மற்றும் செயலர் அருண் ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி