காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், ஜமாபந்தி என, அழைக்கப்படும் வருவாய் தீர்வாயம் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.வாலாஜாபாத் தாலுகாவில், ஜூன்- 14ம் தேதி துவங்கி, ஜூன்- 21ம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்கு, ஜமாபந்தி அலுவலராக கலெக்டர் கலைச்செல்வி நியமிக்கப்பட்டு உள்ளார்.குன்றத்துார் தாலுகாவில், ஜூன் -14ம் தேதி துவங்கி, ஜூன் -25ம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்கு, ஜமாபந்தி அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார்.காஞ்சிபுரம் தாலுகாவில், ஜூன்- 14ம் தேதி துவங்கி, ஜூன் -25ம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்கு, ஜமாபந்தி அலுவலராக, காஞ்சிபுரம்ஆர்.டி.ஓ., நியமிக்கப்பட்டு உள்ளார்.ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், ஜூன்- 14ம் தேதி துவங்கி, ஜூன் -21ம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்கு, ஜமாபந்தி அலுவலராக ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., நியமிக்கப்பட்டு உள்ளார். உத்திரமேரூர் தாலுகாவில், ஜூன்- 14ம் தேதி துவங்கி, ஜூன் -27ம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்கு, ஜமாபந்தி அலுவலராக, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார்.இந்த வருவாய் தீர்வாய முகாமில், பொது மக்கள் தங்களின் கோரிக்கைகளை முன் கூட்டியே, அந்தந்த தாசில்தார்களிடம் கொடுத்து தீர்வு பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.