உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஜெயலலிதா பிறந்த நாள் விழா வடக்குப்பட்டில் அன்னதானம்

ஜெயலலிதா பிறந்த நாள் விழா வடக்குப்பட்டில் அன்னதானம்

ஸ்ரீபெரும்புதுார், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்த நாள் விழா, குன்றத்துார் ஒன்றியம், வடக்குப்பட்டு ஊராட்சியில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச் செயலர் வசந்தகுமார் தலைமை தாங்கி, கட்சி கொடியை ஏற்றி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், வடக்குப்பட்டு ஊராட்சி கிளை கழக செயலர்கள் நீலமேகன், மாரியப்பன், வாசு, பத்மநாபன், அருண்குமார், வரதன், குமார், மாரி, அரிதாஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை