தாலுகா அலுவலகத்தில்
சுகாதாரமற்ற கழிப்பறை
காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு தேவைக்காக தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு பொதுமக்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையை முறையாக பராமரிக்காதால், அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ளது.கழிப்பறையை பயன்படுத்துவோருக்கு தொற்றுநோய் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சுகாதாரமற்ற நிலையில் உள்ள பொதுமக்களுக்கான கழிப்பறையை முறையாக பராமரிக்க தாலுகா அலுவலக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.முத்துகுமார்,சின்ன காஞ்சிபுரம்.நடைபாதையில் வழிகாட்டி பலகை
உத்திரமேரூரில் பாதசாரிகள் அவதி
உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில். சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி. கடந்த மாதம், 23ம் தேதி நடந்த தேரோட்டத்தையொட்டி, பஜார் வீதியில், இடையூறாக இருந்த, வெளியூர் வாகன ஓட்டிகளின் வசதிக்காக மேல்மருவத்துார், அச்சிறுப்பாக்கம், சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம் ஊர்களுக்கு எந்த திசையில் செல்ல வேண்டும் என, அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பெயர் பலகையை நெடுஞ்சாலைத் துறையினர் கழற்றி, சாலையோர நடைபாதையில் வைத்தனர்.பிரம்மோற்சவம் முடிந்து மூன்று வாரங்களுக்கு மேலாகியும், மீண்டும் அதே இடத்தில் வழிகாட்டி பலகை பொருத்தப்படாமல் உள்ளது. இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.வெளியூரில் இருந்து வரும் ஓட்டிகள் வழிதவறி செல்லும் நிலை நிலை உள்ளது. எனவே, உத்திரமேரூர் பஜார் வீதியில் கழற்றப்பட்ட வழிகாட்டி பெயர் பலகையை மீண்டும் பொருத்த நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தி.சே.அறிவழகன்,திருப்புலிவனம்.