உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி புகார் பெட்டி

காஞ்சி புகார் பெட்டி

எச்சரிக்கை பலகையை மறைக்கும்மரக்கிளை அகற்றப்படுமா?காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர் ஊராட்சி, மேட்டுகுப்பத்தில் இருந்து, மேல்ஒட்டிவாக்கம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள வளைவு பகுதியில் வாகன விபத்து ஏற்படுவதை தவிர்க்க, சாலை வளைவு குறித்த எச்சரிக்கை குறியீடு பலகை நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.இப்பலகை அருகில் உள்ள மரக்கிளையால் சாலை வளைவு எச்சரிக்கை பலகை மறைந்துள்ளது. இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் வளைவு பகுதியை கவனிக்காமல் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, சாலை வளைவு எச்சரிக்கை பலகையை மறைக்கும் மரக்கிளையை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- எஸ்.முத்துகுமார்,சின்ன காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி