உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கருணாநிதி நுாற்றாண்டு பூங்கா பணி தீவிரம்

கருணாநிதி நுாற்றாண்டு பூங்கா பணி தீவிரம்

சென்னை, : கருணாநிதி நுாற்றாண்டு பூங்கா கட்டுமானப்பணிகளை தோட்டக்கலைத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.சென்னை தேனாம்பேட்டை, செம்மொழி பூங்காவிற்கு எதிரே, தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான 6.30 ஏக்கர் நிலம் உள்ளது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து, இந்த நிலத்தை சட்டப்போராட்டம் வாயிலாக அரசு மீட்டது. கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, இங்கு அவரது பெயரில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இங்கு, பூங்கா அமைப்பதற்கு, பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. பூங்காவில் அழகிய செடிகள், மரங்கள், நீரூற்றுகள் மட்டுமின்றி பார்வையாளர் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. செம்மொழி பூங்கா மற்றும் கருணாநிதி நுாற்றாண்டு பூங்காவை இணைக்கும் வகையில், கதீட்ரல் சாலையில் குறுக்கே, நடைமேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. இதில், பேட்டரி வாகனங்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கருணாநிதி நுாற்றாண்டு விழா, ஜூன் 3ல் நிறைவு பெறுகிறது. எனவே, தேர்தல் நடத்தை விதிகள், முடிவுக்கு வந்தவுடன், இந்த பூங்காவை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, இரவு, பகலாக பணிகள் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ