| ADDED : மே 17, 2024 11:58 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடப்பது வழக்கம்.கடந்த 2011ம் ஆண்டு இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி வாசிகள் தீர்மானித்தனர்.இதற்காக, கடந்த சில மாதங்களாக இக்கோவிலில் சிதிலமடைந்த பகுதிகள் சீர்செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நாளை மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.விழாவையொட்டி, இன்று காலை 5:00 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, தனலட்சுமி பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், மஹா தீபாராதனை நடைபெறுகிறது.மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி மற்றும் முதற்கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, நாளை காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.