| ADDED : ஜூலை 11, 2024 12:19 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நெல்லுக்கார தெருவில், கேது கிரகத்தின் பரிகார ஸ்தலமான சித்ரகுப்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், அர்ச்சனை பொருட்களான ஆவின் நெய், தேங்காய், புஷ்பம், உள்ளிட்ட அர்ச்சனை பொருட்கள் மற்றும் 4 சக்கர வாகன பாதுகாப்பு கட்டணம் உள்ளிட்ட உரிமங்களுக்கான பொது ஏலம் நேற்று நடந்தது.கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரகுநாதன், அறங்காவலர்கள் சந்தானம், ராஜாமணி செயல் அலுவலர் அமுதா உள்ளிட்ட ஹிந்து சமய அறநிலையத்துறையினர் முன்னிலையில் ஏலம் நடந்தது.இதில், 21 லட்சத்து 11,777 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. 2024ம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி முதல், 2025ம் ஆண்டு, ஜூன் 30ம் தேதி வரை ஓராண்டு காலத்திற்கு இந்த உரிமம் செல்லுபடியாகும்.