உள்ளூர் செய்திகள்

65 பேருக்கு கடனுதவி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை நடுத்தெருவில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், இந்த வங்கியின் கிளைகள் செயல்படுகின்றன.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், மேல்மருவத்துார், செய்யூர், அச்சிறுபாக்கம், படாளம் ஆகிய கிளை வங்கிகளின் வாயிலாக மாற்றுத்திறனாளிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், ஆதரவற்ற மகளிர் கடனுதவி வழங்கப்பட்டது.இதில், 65 பயனாளிகளுக்கு 40 லட்சம் ரூபாய் கடனுதவியை, காஞ்சிபுரம்மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர்சிவமலர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை