உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெரியாண்டவர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

பெரியாண்டவர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் அருந்ததியர்பாளையம் கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா, ஜூன் மாதம், 19ம் தேதி நடந்தது. தினசரி மண்டலாபிஷேக பூஜைகள் நடந்தன.மண்டலாபிஷேக நிறைவு நாளை முன்னிட்டு, பெரியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், ஹோமம் மற்றும், 108 சங்கு தீர்த்தத்தில் மஹா அபிஷேகம் நேற்று நடந்தன.அதை தொடர்ந்து, சிவாச்சாரியர் புனித நீர் ஊற்றி மண்டலாபிஷேகத்தை நிறைவு செய்தார். இதையடுத்து, ராஜ அலங்காரத்தில் பெரியாண்டவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி