மேலும் செய்திகள்
பராமரிப்பின்றி ஒரகடம் மேம்பாலம்
27-Aug-2024
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், காந்துார் ஊராட்சி, மேட்டுகாந்துார் வழியாக, பொடவூர், கீராநல்லுார், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில், மேட்டுகாந்துார் பெருமாள் கோவில் அருகே உள்ள சிறுபாலம் உடைந்துள்ளது.இதனால், இவ்வழியாக வரும் வாகனங்கள், உடைந்துள்ள சிறுபாலத்தால் விபத்தில் சிக்குகின்றனர்.மேலும், அப்பகுதியில் போதிய மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால், பாதசாரிகள்மற்றும் கால்நடைகளும் சிறு பாலத்தில் விழுந்து காயமடைகின்றனர்.எனவே, சேதமான சிறு பாலத்தை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என, அப்பகுதியினர்எதிர்பார்க்கின்றனர்.
27-Aug-2024