உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வர்ணம் பூசாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

வர்ணம் பூசாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் வல்லக்கோட்டை அடுத்த, வல்லம் சந்திப்பில், வல்லம் சிப்காட் செல்லும் சாலை பிரிந்து செல்கின்றது. தவிர, சுங்குவார்சத்திரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு, இந்த சிப்காட் சாலை வழியே தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.இந்த சாலையில், அதிவேகமாக வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்தினை தடுக்கும் வகையில், வாகனங்களில் வேகத்தை கட்டுபடுத்த, சாலையின் இருபுறங்களிலும் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது.இந்த வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூசவில்லை. மேலும், வேகத்தடையை அறிவுறுத்தும் எச்சரிக்கை பலகையும் அமைக்கவில்லை.இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகள், வேகத்தடை எங்குள்ளது என தெரியாமல், அதில் ஏறி, நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.எனவே, சிப்காட் சாலையில் உள்ள வேகத்தடைகள் மீது வர்ணம் பூச, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை