உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெடுஞ்சாலை மீடியனில் மணல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

நெடுஞ்சாலை மீடியனில் மணல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

திருவள்ளூர், : சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை வழியே தினமும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை முதல், ஸ்ரீபெரும்புதுார் வரை நெடுஞ்சாலையோரம் மற்றும் சர்வீஸ் சாலை பகுதியில் உள்ள மீடியன் பகுதியில் மழைநீர் வடிந்து ஓடிய சாலை பகுதியில் மணல் படிந்துள்ளது.முறையான பராமரிப்பின்றி போனதால், மாத கணக்கில் அந்த மணல் அகற்றப்படாமல் குப்பை சேர்ந்து உள்ளது. சில இடங்களில் செடிகளும் வளர்ந்து வருகின்றன.இதனால் மேம்பாலத்தில் ஓரமாக செல்ல வேண்டிய இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மீடியன் பகுதியில் மணல் மற்றும் குப்பையை அகற்றி, முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை