| ADDED : ஜூலை 26, 2024 10:46 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள பெரும்பாலான வங்களின் ஏ.டி.எம்.,களில், 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. அரிதாகவே, சில ஏ.டி.எம்., இயந்திரத்தில் 100 ரூபாய் கிடைக்கிறது.ஆனால், பெரும்பாலான நேரங்களில், எந்தவொரு ஏ.டி.எம்., இயந்திரங்களிலும், 100 மற்றும் 200 ரூபாயை பெற முடியவில்லை என, வங்கி வாடிக்கயைாளர்கள் புலம்புகின்றனர். அதற்கு மாறாக, 500 மட்டுமே இருப்பதாக ஏ.டி.எம்., இயந்திரங்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளருக்கு தேவையான ரூபாயை ஏ.டி.எம்., வாயிலாக பெற முடிவதில்லை. வாடிக்கையாளர்களால், 500 ரூபாய்க்கும் குறைவாக பெற முடியாததால், சில சமயம் சிரமப்படுகின்றனர்.எனவே, வங்கி நிர்வாகம், ஏ.டி.எம்., இயந்திரத்தில், 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.