உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் பழையசீவரம் அணியினர் முதலிடம்

கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் பழையசீவரம் அணியினர் முதலிடம்

காஞ்சிபுரம் : வாலாஜாபாத் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், 30 அணிகள் பங்கேற்ற மாபெரும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தன.இதில், பழையசீவரம் இன்பா கிரிக்கெட் கிளப் அணியினர் முதலிடம் பிடித்துள்ளனர். வாலாஜாபாத் ஜூஸ்பார்ட் அணியினர் இரண்டாவது இடமும், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த மற்றொரு அணி மூன்றாவது இடமும் பிடித்துள்ளன.வாலாஜாபாத் வியாபாரிகள் சங்க நிர்வாகி அரிகுமார் முதலிடம் பிடித்த பழையசீவரம் இன்பா கிரிக்கெட் கிளப் அணியின் கேப்டன் சிலம்பரசனிடம் வெற்றி கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ