மேலும் செய்திகள்
புதர் மண்டிய கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
14-Aug-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை பேராசிரியர் நகர் 2வது பகுதியில், 100க்கும் மேற்பட்டவீடுகள் உள்ளன.இப்பகுதியில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் வசதி இல்லை.இதனால், அப்பகுதியில் உள்ள காலி மனைகளிலும், சாலையோரம் உள்ள மண் கால்வாயிலும் வீட்டு உபயோக கழிவுநீருடன், மழைநீர் கலந்து தேங்கியுள்ளது.மழைநீர் வெளியேறும் வகையில், பூங்கா ஒட்டியுள்ள சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டதால், இப்பகுதியினர், பள்ளத்தை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.குறிப்பாக பெண்கள் கால்வாயை தாண்டும்போது, நிலைதடுமாறி விழும் சூழல் உள்ளது.இதேபோல, இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர்.மேலும், அப்பகுதியில் உள்ள குபேர விநாயகர் கோவில் எதிரில், கழிவு நீர் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் முகம் சுளித்தபடியே வந்து செல்கின்றனர்.இதனால், பேராசிரியர் நகரில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, பேராசிரியர்நகர் 2ல், சாலையின் குறுக்கே கால்வாய்வெட்டிய இடத்தில், சிறுபாலம் அமைப்பதோடு, மழைநீர் முழுமையாக வெளியேறும் வகையில், 'கான்கிரீட்' கால்வாய் அமைக்க வேண்டும்என, அப்பகுதியினர்வலியுறுத்தி உள்ளனர்.
14-Aug-2024