உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

குன்றத்துார்:குன்றத்துார், மூன்றாம்கட்டளையை சேர்ந்தவர் மணிகண்டன், 44. நகை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி யுவராணி, 40. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டின் தொலைக்காட்சி சரியாக தெரியாததால், அதை சரிசெய்யும் பணியில் மணிகண்டன் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்தது. காப்பாற்ற முயன்ற யுவராணி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதைப்பார்த்த குழந்தைகள் சத்தமிட்டதையடுத்து, அருகில் வசிப்பவர்கள், இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். யுவராணி சிகிச்சை பெற்று வருகிறார். குன்றத்துார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ