உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெருங்களத்துார் மேம்பால பாதை திறப்பு

பெருங்களத்துார் மேம்பால பாதை திறப்பு

பெருங்களத்துார்,:சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், 234 கோடி ரூபாய் செலவில், மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தில், முதற்கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் - தாம்பரம் மார்க்கமான பாதையும், தொடர்ந்து, புது பெருங்களத்துார், சீனிவாசா நகர் வழியாக இறங்கும் பாதையும் திறக்கப்பட்டன.தற்போது, தாம்பரம் - வண்டலுார் மார்க்கமான பாதை, நேற்று திறக்கப்பட்டது. இதனால், பெருங்களத்துாரில், போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில், நெடுங்குன்றம் மார்க்கமான பணியை முடிக்க, மத்திய வனத்துறையின் அனுமதி பெற வேண்டிஉள்ளது. பொதுப்பணித் துறை அதிகாரிகள், மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்று, பணிகளை துவக்கி, அந்த பாதையையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி