உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒரகடம் சிப்காட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ஒரகடம் சிப்காட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடத்தில் இருந்து, மேட்டுப்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சிப்காட் சாலை வழியே தினமும் கார், பைக், கனரக வாகனங்கள் என, 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அருகே இச்சாலை சேதமடைந்து உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்குகின்றனர்.இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் விழுகின்றனர். எனவே, சேதமான சாலையை சீரமைக்க, ஒரகடம் சிப்காட் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி