உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடிகால்வாய் வசதி இல்லாததால் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்

வடிகால்வாய் வசதி இல்லாததால் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை, ஒஸ்கேட்டே வழியாக பெங்களூருக்கு செல்வதற்கு, அதிவிரைவு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்த சாலை போடும் பணிக்கு, 3,477 கோடி ரூபாய் கட்டுமானத்திற்கும்; 3,929 கோடி ரூபாய் நில எடுப்பிற்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.அதிவிரைவு சாலைக்கு, புதிய சாலை போடுவதற்கு, 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், மண் மாதிரிகளை சேகரிக்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் செய்தனர்.முதல்கட்டமாக, கூத்தவாக்கம் ஏரி, மேல் பொடவூர், மணியாட்சி, கோவிந்தவாடி ஏரி ஆகிய இடங்களில் உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணி நடந்து வருகின்றன.இதையடுத்து, உயர் மட்ட பாலங்கள் மற்றும்அந்த உயரத்திற்கு ஏற்ப, மண் சாலை போடும் பணியை, அந்தந்த சாலை போடும் ஒப்பந்தம் எடுத்தவர்கள் செய்து வருகின்றனர்.இந்த சாலை போடும் இடங்களை ஒட்டிய விவசாய நிலங்களில், லேசாக மழை வந்தால் கூட, முழங்கால் வரையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், விவசாய உரம், விதை ஆகிய இடுபொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை மற்றும் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.உதாரணமாக, கோவிந்தவாடி ஏகாத்தம்மன் கோவில் அருகே, சென்னை- - -பெங்களூரு அதிவிரைவு சாலையில் ரவுண்டானா அமைய இருக்கிறது.இந்த சாலை போடும் பணிக்கு கொட்டிய மண்ணால், இருபுறமும் 150 ஏக்கர் நேரடி விதைப்பு செய்த நிலங்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. மழைநீரை வடி கால்வாய் வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலும், தண்ணீர் மற்றொருவரின் சாகுபடி செய்த நிலத்தில் சென்று தேங்குகிறது.இதனால், இளம் பயிர் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் உள்ளது. அதேபோல, அறுவடைக் காலங்களிலும், நெற்கதிர் மழைநீரில் சிக்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த சாலை போடும் பணியால், கோவிந்தவாடி கிராம விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:சென்னை- - பெங்களூரு அதிவிரைவு சாலை போடுவதற்கு மண் கொட்டி உள்ளனர். சாலை குறுக்கே, வடி கால்வாய் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், மழை பெய்தால் பயிர்கள் நீரில் மூழ்கி விடுகின்றன.அதேபோல, அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரங்களிலும் மழை வந்தால், நெற்கதிர் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை