| ADDED : ஆக 17, 2024 07:55 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டாரத்தில், ஏரி மற்றும் கிணற்று பாசனம் வாயிலாக, சொர்ணவாரி பட்டத்திற்கு 8,800 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.கதிர் முற்றிய பயிர்கள், சில நாட்களாக அறுவடை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், சொர்ணவாரி பட்டத்திற்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியம், புலிவாய், கருவேப்பம்பூண்டி, திருப்புலிவனம், மருதம், அழிசூர், இளநகர், பெருங்கோழி ஆகிய இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று திறந்து வைத்தார். உத்திரமேரூர் தி.மு.க., ஒன்றிய செயலர் ஞானசேகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.