உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வல்லக்கோட்டை முருகருக்கு பங்குனி உத்திர உற்சவம்

வல்லக்கோட்டை முருகருக்கு பங்குனி உத்திர உற்சவம்

ஸ்ரீபெரும்புதுார், : வல்லக்கோட்டை முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் உற்சவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திர உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சந்தன காப்புடன் மலர் அலங்காரத்திலும், உற்சவர் முருகப் பெருமானுக்கு பலவித மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சஷ்டி மண்டபத்தில் அவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டனர்.கோவில் நிர்வாகம் சார்பில் மோர், குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி