உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையை கடந்த புள்ளிமான் வாகனம் மோதி உயிரிழப்பு

சாலையை கடந்த புள்ளிமான் வாகனம் மோதி உயிரிழப்பு

மறைமலை நகர் : செங்கல்பட்டு அடுத்த பரனுார், மகேந்திரா சிட்டி செட்டிப்புண்ணியம், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில், பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் காப்புக்காடுகள் உள்ளன.இதில், புள்ளிமான், மயில், முயல் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. தற்போது, கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் வாட்டி வருகிறது.இதனால், வன விலங்குகள் குடிக்க தண்ணீர் தேடி, குடியிருப்புகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. இந்நிலையில், நேற்று காலை மகேந்திரா சிட்டி அருகில், தண்ணீர் தேடி வந்த நான்கு வயது பெண் புள்ளிமான், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தாம்பரம் மார்க்கத்தில் சாலையை கடக்க முயன்றது.அப்போது, அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு வனத்துறை அதிகாரிகள், மான் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, வனத்துறை அலுவலகம் எடுத்துச் சென்று, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இரண்டு மாதங்களுக்கு முன், பனங்கொட்டூர் ஏரியில் தண்ணீர் குடிக்க சென்ற புள்ளிமான், சேற்றில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி