மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
25 minutes ago
விவசாயிகள் தின விழா
31 minutes ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
42 minutes ago
மாங்காடு, : மாங்காடு நகராட்சியின் 25 வார்டுகளில், 300க்கும் மேற்பட்ட சாலையோர உணவகங்கள் செயல்படுகின்றன.கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நடைபாதை வியாபாரிகள் பயனடையும் வகையில், மாங்காடு நகராட்சி நிர்வாகம் சார்பில், 20 பேருக்கு நடைபாதை கடை வழங்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக இரும்பிலான பெரிய அளவு பெட்டியான நடைபாதை கடைகள் வாங்கப்பட்டன. ஆனால் அவை, ஓராண்டுக்கு மேலாக வழங்கப்படாமல் பாதுகாப்பின்றி திறந்தவெளியில் வைக்கப்பட்டு உள்ளன.இந்த கடைகளைச் சுற்றி புதர்மண்டியும், மழை, வெயிலில் காய்ந்து துருப்பிடித்தும் வீணாகி வருகின்றன. இந்த கடைகளை பயனாளிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
25 minutes ago
31 minutes ago
42 minutes ago