| ADDED : ஜூலை 05, 2024 12:09 AM
ஒழையூர்:வாலாஜாபாத் ஒன்றியம், ஒழையூர் ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெருவில், 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது.இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ், 200 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, ஒழையூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவிற்கு, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணி ஓரிரு நாட்களில் நிறைவு பெறும் என, வாலாஜாபாத், ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.