உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒரகடத்தில் 200 மரக்கன்றுகள் நடவு

ஒரகடத்தில் 200 மரக்கன்றுகள் நடவு

ஸ்ரீபெரும்புதுார்:'விதைகள்' தன்னார்வ அமைப்பினர் சார்பில், பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.அந்த வகையில், ஒரகடம் அடுத்த, வடக்குப்பட்டில் உள்ள திருவேணி அகாடமி பள்ளி மற்றும் விதைகள் தன்னார்வ அமைப்பினர் இணைந்து, பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் 200 நாட்டு மரக்கன்றுகளை நட்டனர்.'வன மகோத்சவம்' தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஆர்வமாக மரக்கன்றுகளை நட்டனர். இதில், தன்னார்வ அமைப்பினர், பள்ளி மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி