உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 1,000 மரக்கன்றுகள் நடவு

1,000 மரக்கன்றுகள் நடவு

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சியில், அரசுக்கு சொந்தமான காலி இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.இதுகுறித்து, காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி தலைவர் பொன்னா கூறியதாவது:ஊராட்சியில் காலியாக உள்ள இடங்களில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் வேம்பு, கொய்யா, புங்கன், நாவல், மா உள்ளிட்ட 1,000 மரக்கன்று நடவு செய்ய முடிவு செய்துள்ளோம்.அதன்படி, ஊராட்சியில் உள்ள அனைத்து சாலையோரங்களிலும் மரக்கன்று நடப்பட உள்ளது. பஞ்சுபேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி