உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரும் 30ல் மாநில செஸ் போட்டி பங்கேற்க வீரர்களுக்கு அழைப்பு

வரும் 30ல் மாநில செஸ் போட்டி பங்கேற்க வீரர்களுக்கு அழைப்பு

சென்னை, தாம்பரத்தில் வரும் 30ம் தேதி நடக்க உள்ள மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு செஸ் சங்கம் ஆதரவில், ஆனந்தன் செஸ் அகாடமி சார்பில், மாநில அளவிலான செஸ் போட்டி, தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளியில் வரும் 30ம் தேதி நடக்கிறது.இதில், எட்டு, 10, 13 மற்றும் 25 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. போட்டிகள், சுவிஸ் முறையில், பிடே விதிப்படி நடக்கின்றன. அனைத்து பிரிவுகளில், முதல் 15 இடங்களை பிடிப்போருக்கு கோப்பைகளும், முதல் ஐந்து இடங்களை பிடிப்போருக்கு பதக்கங்களும் வழங்கப்படுகின்றன. பங்கேற்க விருப்பமுள்ளோர் நாளை மாலை வரை பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 97102 86934, 86102 92372 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ