மேலும் செய்திகள்
வள்ளலார் அவதார விழா ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்
06-Oct-2025
குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
06-Oct-2025
சிவன் கோவில்களில் துாய்மை பணி
06-Oct-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் தி.மு.க., 33, அ.தி.மு.க., 9, சுயேச்சைகள் 5, பா.ம.க., 2 பா.ஜ., - காங்., தலா ஒரு கவுன்சிலர்கள் உள்ளனர்.இதில், 35 கவுன்சிலர்கள், மேயர் மஹாலட்சுமிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, கமிஷனர் செந்தில்முருகனிடம் விண்ணப்பம் அளித்தனர்.அதன் அடிப்படையில், நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம், இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.கடந்த ஆறு மாதங்களாகவே, மேயர் மகாலட்சுமிக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே பிரச்னை நீடித்து வந்தது. கவுன்சிலர்களை அமைச்சர் நேரு, மாவட்ட செயலர் சுந்தர் ஆகியோர் அழைத்து பேசினர்.இருப்பினும், மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்துவது, கமிஷனரை முற்றுகையிடுவது போன்ற செயல்களில், கவுன்சிலர்கள் ஈடுபட்டனர்.மேயருக்கு ஆதரவாக 13 தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க., கவுன்சிலர் விமலாதேவி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அகிலா, வேலரசு ஆகிய மூன்று பேரில் நிலைப்பாடு எப்படியென தெரியவில்லை. இப்படிப்பட்ட நிலையில், மேயர் பதவியிலிருந்து மஹாலட்சுமியை நீக்க, 41 கவுன்சிலர்கள், எதிராக ஓட்டளிக்க வேண்டும்.அதிருப்தி கவுன்சிலர்கள், நிலைபாடு எடுக்காத கவுன்சிலர்கள், ஆதரவு கவுன்சிலர்களில் சிலர் மாயம் போன்ற அரசியல் விளையாட்டுகளில் மேயர் பதவி தப்புமா என, மஹாலட்சுமி தரப்பு கலக்கத்தில் உள்ளது.
06-Oct-2025
06-Oct-2025
06-Oct-2025