உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்னணு கழிவுகளால் ஆண்டி சிறுவள்ளூர் ஏரி மாசு 

மின்னணு கழிவுகளால் ஆண்டி சிறுவள்ளூர் ஏரி மாசு 

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தில், நீர்வளத் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, ஆண்டி சிறுவள்ளூர், ஆண்டிதாங்கல், புதுநகர் ஆகிய பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த ஏரியையொட்டி, பரந்துார் - பொன்னேரிக்கரை பிரதான சாலை செல்வதால், குப்பை, தொழிற்சாலை கழிவுகள், மின்னணு கழிவுகளை ஏரியில் கொட்டி விட்டு செல்கின்றனர்.இதனால், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளுக்கு கால்களில் காயம் ஏற்படுவதோடு, மின்னணு பொருட்களை எரிப்பதால், ஏரி மாசு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, நீர்வளத் துறைக்கு சொந்தமான ஏரிகளில் கழிவுகளை கொட்டுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ