உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏகனாபுரத்தில் வளர்ச்சி பணிகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் நீடிப்பு

ஏகனாபுரத்தில் வளர்ச்சி பணிகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் நீடிப்பு

ஏகனாபுரம் : மதுரமங்கலம் அடுத்த, ஏகனாபுரம் ஊராட்சி உள்ளது. இங்கு, பரந்துார் விமான நிலையத்தை எதிர்த்து, பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் மற்றும் கிராமத்தினர் நடத்தி வருகின்றனர்.இருப்பினும், ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கு, நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என, கிராமத்தினர் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், மழைநீர் கால்வாய் கட்டுமானம், பிற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் பணி நிர்வாக அனுமதி அளிக்கவில்லை என, கிராம மக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால், ஏகனாபுரம் கிராமத்திற்கு தேவையான வளர்ச்சி பணிகள் பூர்த்தி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.எனவே, ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கு தேவை யான நிதியை, ஊரக வளர்ச்சி துறையினர் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏகனாபுரம் ஊராட்சிக்கு,நிர்வாக செலவினங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு வழங்கி வருகிறோம். பிற வளர்ச்சி பணிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் தான் அனுமதி அளிக்க வேண்டும். இதில், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை