உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புரிசை அரசு பள்ளிக்கு ரூ.52 லட்சத்தில் சுற்றுச்சுவர்

புரிசை அரசு பள்ளிக்கு ரூ.52 லட்சத்தில் சுற்றுச்சுவர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, புரிசை கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 110 மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர்.கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன், இரண்டு அடுக்கு மாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பள்ளிக்கு போதிய சுற்றுச்சுவர் வசதி இல்லை.இதனால், ஆடு, மாடுகள் பள்ளி வளாகத்தில் எளிதாக பிரவேசிப்பதோடு, மாணவ - மாணவியருக்கு அச்சுறுத்தும் விதமாக இருக்கின்றன.இதுதவிர, வேளாண் இயந்திரங்கள் மற்றும் உழவு வாகனங்கள் நிறுத்துமிடமாக பள்ளி வளாகம் மாறி உள்ளது. எனவே, புரிசை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு போதிய சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து,கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:புரிசை உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவருக்கு, 52 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில், 520 மீட்டர் துாரத்திற்கு, பொதுப்பணித் துறையினர் சுற்றுச்சுவர் கட்ட உள்ளனர். இந்த பணிகள் அடுத்த வாரம் துவக்க உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்