உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதர் மண்டிய நகரீஸ்வரர் கோவில் குளம்

புதர் மண்டிய நகரீஸ்வரர் கோவில் குளம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், மேட்டுத் தெருவில், நகரீஸ்வரர் கோவில் குளம் அமைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன், குளத்து நீரை எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பின், பராமரிப்பு இல்லாமல் குளம் சீரழிந்தது.கடந்த 2002ல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புடன் குளம் புதுப்பிக்கப்பட்டது. அப்பகுதி நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கிய இக்குளம் தற்போது முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்தில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளது.எனவே, குளத்தில் மண்டிக் கிடக்கும் செடி, கொடிகளை அகற்றி, குளத்தை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்