உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏப்., 20ல் ராமலிங்கேஸ்வர் திருக்கல்யாண உற்சவம்

ஏப்., 20ல் ராமலிங்கேஸ்வர் திருக்கல்யாண உற்சவம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதம் உத்திர நட்சத்திர தினத்தன்று, பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.நடப்பாண்டின் திருக்கல்யாண உற்சவ வைபவம், ஏப்., 20ம் தேதி அன்று, இரவு 7:45 மணி முதல், 8:45 மணி அளவில், திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற உள்ளது.இதில், திம்மராஜம்பேட்டை மட்டுமல்லாது, பல்வேறு கிராமத்தினர் பங்கேற்று, இறை தம்பதியரின் ஆசி பெறலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை