உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரயிலில் அடிபட்டு மாணவர் பலி உறவினர்கள் மறியலில் ஈடுபட முயற்சி

ரயிலில் அடிபட்டு மாணவர் பலி உறவினர்கள் மறியலில் ஈடுபட முயற்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஜெகதீஷ், 17. இவர், ஊவேரிச்சத்திரம்பகுதியில் உள்ள செங்கல்வராயன் நாயக்கர் அறக்கட்டளை கீழ் இயங்கும்கல்வி நிறுவனத்தில் ஐ.டி.ஐ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில், அரக்கோணத்திலிருந்து, செங்கல்பட்டு நோக்கி சென்றமின்சார ரயிலில் அடிபட்டு, நேற்று முன்தினம், தண்டவாளம் அருகே இறந்து கிடந்தார்.ரயில்வே போலீசார் மாணவரின் சடலத்தை கைப்பற்றி, விபத்துநடந்தது பற்றி விசாரித்து வருகின்றனர்.பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில்மாணவரின் சடலம்நேற்று வைக்கப்பட்டிருந்தது. மாணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி, மாணவரின் பெற்றோர், உறவினர்கள் என, 20க்கும் மேற்பட்டோர், காஞ்சிபுரம் அரசுமருத்துவமனை வெளியே மறியல் போராட்டம் செய்ய முயன்றனர்.விஷ்ணுகாஞ்சிபோலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, சமாதானம்செய்தனர்.இதையடுத்து, மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில், மாணவரின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ